ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டது

ஹாங்காங்கிற்கான
எழுபது லட்சம் மக்கள் தொகையை கொண்ட ஹாங்காங் பல்லாண்டு காலமாக England colony ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது.  இங்கிலாந்து சீனாவிடம் ஒப்படைத்தது. அப்போது தொடங்கி தற்போது வரை ஹாங்காங், சீனாவின் காட்டுப்பாட்டில் உள்ள சுயாட்சி பிரதேசமாகும்.

அதாவது ஹாங்காங், china விகையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சிப் பிரதேசம். வெளியுறவு, ராணுவம் ஆகிய இரு துறைகளில், ஹாங்காங்கை சீனா கட்டுப்படுத்தும். மற்ற அனைத்துத் துறைகளையும் ஹாங்காங் அரசே நிர்வகிக்கும்.2019-ல் குற்றவாளிகளை சீனாவிடம் ஒப்படைக்க வகை செய்யும் மசோதா கொண்டுவரப்பட்டது.

புதிய பாதுகாப்புச் சட்டம்

இது ஹாங்காங்கில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அதிஉச்ச ஜனநாயக வழியில் ஹாங்காங் மக்கள் அமைதி வழி போராட்டங்களை நடத்தினர். இதனையடுத்து தற்போது தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்றை சீனா கொண்டுவரும் முயற்சியில் சீனா இறங்கியது.. இந்த சட்டம் அமலுக்கு வந்தால் தங்களின் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து ஏற்படும் என கருதி ஹாங்காங் மீண்டும் போராட்ட களமாகியது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சீன நாடாளுமன்ற கூட்டம் தொடக்கமானது இப்போது மீண்டும் செயல்படத்தொடங்கியது .

அப்போது தேசிய பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.சீனாவின் பாராளுமன்றம் ஹாங்காங்கிற்கான புதிய பாதுகாப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.